Friday, January 23, 2015

நான் Scientist ஆகிட்டேன்!!!

நேரம் : இரவு 10:00

ஆதவ் வேகமா ஓடி வந்து என் பின்னாடி ஒளிஞ்சுகிட்டான் ...

அம்மா :  பாருங்க இவன் பாலே குடிக்க மாட்றான் ..  இந்தாங்க இவன பால் குடிக்க வைங்க

அப்பா :  Hey போடி வேற வேலை இல்ல ..

அம்மா :  வேற வேலை இல்ல தான் .. ஒழுங்கா குடிக்க வைங்க... (Only married men will know this                 tone)   அப்பனும் புள்ளையும் சொல் பேச்சே கேட்கிறது இல்ல .. ஒரு வேலையும் செய்றது                   இல்ல..  (எல்லா dialogue um போட்டா blog பத்தாது ..  So இப்போதைக்கு ரெண்டு sample               dialogue போதும்  )

அப்பா :  ஆதவ் .. அம்மா அப்பாவ திட்டுதுடா .. ஒழுங்கா குடிச்சிடு
ஆதவ் :  (பாவமா மூஞ்ச வெச்சுகிட்டு .. )  அப்பா..  அம்மா..  என்னையும் திட்டுனாங்கப்பா ....
               எதுக்குபா நாம பால் குடிக்கனும் ?
அப்பா :  பால் குடிச்சா தாண்டா அப்பா மாதிரி நீ பெரிய ஆளா ஆக முடியும்..  ஆதவ் நீ பெரிய ஆளா               ஆனா என்னவா ஆவ?
ஆதவ் :  அப்பா நான் உங்கள மாதிரி engineer ஆவேன்பா ..
அப்பா :  அடப்பாவி ஏண்டா ?
ஆதவ் :  அப்போ தான நானும் laptop mobile எல்லாம் use பன்ன முடியும் .
அப்பா :  டேய் போதும்டா நான் ஒருத்தன் engineer ஆனது ..   அப்பா சின்ன வயசுல scientist                           ஆகனும்னு தான்டா ஆசைபட்டேன்
ஆதவ் :  சரிப்பா நானும் உங்கள மாதிரியே scientist ஆகணும்னு ஆசபட்றேன் ..
அப்பா :  செல்லம் ஆசைபட்டா மட்டும் போதாதுடா .. Scientist na நிறைய கண்டுபுடிக்கணும்..

ஆதவ் யோசிச்சிட்டே பால குடிச்சான் ...   Success ..

ஆதவ் : நான்  scientist ஆகிட்டேன்ப்பா ..
அப்பா : பால் குடிச்சு முடிக்கிறதுக்குள்ளையா  ...  என்ன ஒரு speed .. எப்டி டா ?
ஆதவ் :  நான் நாளைக்கு (அவனுக்கு நேத்து சொல்ல தெரியாது, நேத்தும் நாளைக்கு தான்                            சொல்லுவான் ..  future ல வாழ்ந்தே பழகிட்டோம் :) )
           ஒரு black bat man toy கண்டுபுடிச்சேன், ஸ்ரீநிதியோட  toy நான் தாம்பா கண்டுபுடிச்சேன் ..

அப்பா : ஐயையோ அந்த கண்டுபுடிக்கிறது இல்லடா ..   இவனுக்கு எப்டி சொல்லி புரிய                                  வைக்கிறது..  சரி விடு ..  எப்டியோ scientist ஆகிடு ஆதவ் ..  என்ன மாதிரி Software Engineer              மட்டும் ஆகிடாத .


From that day .. எத எடுத்தாலும் .. அப்பா நான் scientist ஆகிட்டேன் னு சொல்லிட்டு இருக்கான் :) அவனுக்கு புரியும் போது புரியட்டும் :)


Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum