Saturday, December 27, 2014

எனக்கு ரொம்ப புடிச்சது !!!

ஆதவ் எங்க இருந்தோ ஒரு pencilbox  எடுத்துட்டு வந்தான் ..

ஆதவ் :  அப்பா எனக்கு pencil  box கெடச்சுது .. ஸ்ரீநிதி க்கு pink புடிக்கும் ல அதான் அவளுக்கு pink box ... எனக்கு yellow தான் புடிக்கும் அதான் yellow box .

அப்பா :  Oh உனக்கு yellow தான் புடிச்ச கலரா ஆதவ் ..

ஆதவ் :  ஆமாம்ப்பா எனக்கு yellow தான் புடிக்கும் ..yellow , brown ,red ..

(எல்லா கலரும் சொல்றான் .. .. எவ்ளோ கலர் சொல்றான்னு பாப்போம் .. )

அப்பா :  அப்புறம் ...

ஆதவ் :  blue

அப்பா :  அப்புறம் ..

ஆதவ் :  white

அப்பா :  அப்புறம் ..

ஆதவ் :  Green

அப்பா :  அப்புறம் ..

(யோசிக்க ஆரம்பிச்சுட்டான் ....   அவ்ளோ தான் போல இருக்கு ..  )

அப்பா :  அப்புறம் எதுடா புடிக்கும்??

ஆதவ் :  அப்பா கிட்ட வாங்க உங்க காதுல சொல்றேன் ...

(என்னமோ யோசிச்சுட்டான் ... :) )

அப்பா : ( குனிஞ்சு அவன் கிட்ட போய் .. ) சொல்றா ..

ஆதவ் :  அப்புறம் எனக்கு உங்கள தான்பா ரொம்ப புடிக்கும் ...


Nothing will best describe that moment than a small drop of tear from my eyes..

Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum



Wednesday, December 24, 2014

அப்பாக்கு BMW அம்மாக்கு Audi

ஆதவ் ஒரு கார் பைத்தியம் ..
'Cars' அப்டினு ஒரு Animation Movie .. அந்த படத்த ஒரு 500 times பார்த்து இருப்பான் ..
(கண்டிப்பா சும்மா சொல்லல..  எங்க பார்த்தாலும் , எத பார்த்தாலும் அவனுக்கு car தான் )
சில நேரம் (இல்ல  பல நேரம்) சம கடுப்பா இருக்கும்...

அன்னைக்கு அப்டி தான் .. ரொம்ப நாள் கழிச்சு வீட்ல புது டிவி வாங்கிருந்தோம் ..  DTH ல எல்லா சேனலும் சும்மா browse பண்ணிட்டு இருந்தேன் ..

திடீர்னு

ஆதவ் :  C ...    A .....   R ......   S ......    அப்பா Cars  படம் .. Cars படம்...   (Over  excite ஆகிட்டான் )

அப்போ தான் அவனுக்கு alphabets சேர்த்து words படிக்க தெரியும்னே எனக்கு தெரியும் ...

அப்பா :  டேய் போடா .. ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் டிவி வாங்கி இருக்கோம் .. சும்மா கார் கார்னு ...  (சம கடுப்புல திட்டிட்டேன் ... )

ஆதவ் : (அவன் எனக்கு மேல கடுப்பா ஆகிட்டான்..   கோவமா மூஞ்ச வெச்சுட்டு  )  அப்பா நான் ஏன்  Cars பார்க்கனும்னு சொல்றேன் தெரியுமா?

அப்பா :  தெரியலடா நீயே சொல்லிடு ..

ஆதவ் :  நான் பெரிய பையனா ஆன உடனே, உங்களுக்கு BMW கார் , அம்மாக்கு Audi கார் வாங்கி தரேன்னு சொன்னல .. அதுக்கு தான்ப்பா என்ன Car வாங்கலாம்னு பாக்குறேன் ..
என்ன போய் திட்டுறீங்க ...

அப்பா :  அட என் செல்லமே .. உனக்கு இல்லாத படமாடா.. நல்லா பார்த்து நல்ல Superrr காரா வாங்கி தாடா ஆதவ் ..


Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum



Saturday, December 13, 2014

Punch Dialogue

 இடம் : Bus  Stand

ஆதவும் அவளும் இன்னைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்க ..
அவங்கள Bus stand ல என் பைக் ல drop  பண்ணிட்டு Bus க்கு wait பண்ணிட்டு இருந்தோம்

'ஹையா என் பொண்டாட்டி ஊருக்கு போறா'னு  ரொம்ப உற்சாகமா bike ல சாஞ்சிக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு இருந்தேன் ....   இந்த மொக்கை  bus இப்ப தான் late aa வரும் .....

அம்மா :  ஏங்க என்ன ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... கால நல்லா பப்பரப்ப னு நீட்டிட்டு எங்க வேடிக்கை? .. உள்ள வைங்க .. Bus ஏறிட போகுது ...

அப்பா :  Hey மாமன் கால் இரும்பு டி..   Bus ஏறுனா tyre தாண்டி puncture ஆகும் ..

ஆதவ் : (தீடீர்னு ரொம்ப tension ஆகிட்டான் .. )
                    ஏம்பா இப்டி பண்றீங்க ..
                    Bus எல்லாம்  ஏன் puncture ஆக்குறீங்க ...
                    Bus puncture ஆகிடுச்சுனா நாங்க எப்டி மாமா வீட்டுக்கு போறது ?

அப்பா :  (ஒரு punch dialogue பேச விட மாட்டியாடா .. )
என் கால் தானா உள்ள வந்துடுச்சு ...  மொத்த Bus ஸ்டான்டும் சந்தோசமா சிரிச்சுது :)

Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum