Saturday, December 27, 2014

எனக்கு ரொம்ப புடிச்சது !!!

ஆதவ் எங்க இருந்தோ ஒரு pencilbox  எடுத்துட்டு வந்தான் ..

ஆதவ் :  அப்பா எனக்கு pencil  box கெடச்சுது .. ஸ்ரீநிதி க்கு pink புடிக்கும் ல அதான் அவளுக்கு pink box ... எனக்கு yellow தான் புடிக்கும் அதான் yellow box .

அப்பா :  Oh உனக்கு yellow தான் புடிச்ச கலரா ஆதவ் ..

ஆதவ் :  ஆமாம்ப்பா எனக்கு yellow தான் புடிக்கும் ..yellow , brown ,red ..

(எல்லா கலரும் சொல்றான் .. .. எவ்ளோ கலர் சொல்றான்னு பாப்போம் .. )

அப்பா :  அப்புறம் ...

ஆதவ் :  blue

அப்பா :  அப்புறம் ..

ஆதவ் :  white

அப்பா :  அப்புறம் ..

ஆதவ் :  Green

அப்பா :  அப்புறம் ..

(யோசிக்க ஆரம்பிச்சுட்டான் ....   அவ்ளோ தான் போல இருக்கு ..  )

அப்பா :  அப்புறம் எதுடா புடிக்கும்??

ஆதவ் :  அப்பா கிட்ட வாங்க உங்க காதுல சொல்றேன் ...

(என்னமோ யோசிச்சுட்டான் ... :) )

அப்பா : ( குனிஞ்சு அவன் கிட்ட போய் .. ) சொல்றா ..

ஆதவ் :  அப்புறம் எனக்கு உங்கள தான்பா ரொம்ப புடிக்கும் ...


Nothing will best describe that moment than a small drop of tear from my eyes..

Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum



Wednesday, December 24, 2014

அப்பாக்கு BMW அம்மாக்கு Audi

ஆதவ் ஒரு கார் பைத்தியம் ..
'Cars' அப்டினு ஒரு Animation Movie .. அந்த படத்த ஒரு 500 times பார்த்து இருப்பான் ..
(கண்டிப்பா சும்மா சொல்லல..  எங்க பார்த்தாலும் , எத பார்த்தாலும் அவனுக்கு car தான் )
சில நேரம் (இல்ல  பல நேரம்) சம கடுப்பா இருக்கும்...

அன்னைக்கு அப்டி தான் .. ரொம்ப நாள் கழிச்சு வீட்ல புது டிவி வாங்கிருந்தோம் ..  DTH ல எல்லா சேனலும் சும்மா browse பண்ணிட்டு இருந்தேன் ..

திடீர்னு

ஆதவ் :  C ...    A .....   R ......   S ......    அப்பா Cars  படம் .. Cars படம்...   (Over  excite ஆகிட்டான் )

அப்போ தான் அவனுக்கு alphabets சேர்த்து words படிக்க தெரியும்னே எனக்கு தெரியும் ...

அப்பா :  டேய் போடா .. ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் டிவி வாங்கி இருக்கோம் .. சும்மா கார் கார்னு ...  (சம கடுப்புல திட்டிட்டேன் ... )

ஆதவ் : (அவன் எனக்கு மேல கடுப்பா ஆகிட்டான்..   கோவமா மூஞ்ச வெச்சுட்டு  )  அப்பா நான் ஏன்  Cars பார்க்கனும்னு சொல்றேன் தெரியுமா?

அப்பா :  தெரியலடா நீயே சொல்லிடு ..

ஆதவ் :  நான் பெரிய பையனா ஆன உடனே, உங்களுக்கு BMW கார் , அம்மாக்கு Audi கார் வாங்கி தரேன்னு சொன்னல .. அதுக்கு தான்ப்பா என்ன Car வாங்கலாம்னு பாக்குறேன் ..
என்ன போய் திட்டுறீங்க ...

அப்பா :  அட என் செல்லமே .. உனக்கு இல்லாத படமாடா.. நல்லா பார்த்து நல்ல Superrr காரா வாங்கி தாடா ஆதவ் ..


Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum



Saturday, December 13, 2014

Punch Dialogue

 இடம் : Bus  Stand

ஆதவும் அவளும் இன்னைக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போறாங்க ..
அவங்கள Bus stand ல என் பைக் ல drop  பண்ணிட்டு Bus க்கு wait பண்ணிட்டு இருந்தோம்

'ஹையா என் பொண்டாட்டி ஊருக்கு போறா'னு  ரொம்ப உற்சாகமா bike ல சாஞ்சிக்கிட்டு ரோட்டையே பார்த்துட்டு இருந்தேன் ....   இந்த மொக்கை  bus இப்ப தான் late aa வரும் .....

அம்மா :  ஏங்க என்ன ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல... கால நல்லா பப்பரப்ப னு நீட்டிட்டு எங்க வேடிக்கை? .. உள்ள வைங்க .. Bus ஏறிட போகுது ...

அப்பா :  Hey மாமன் கால் இரும்பு டி..   Bus ஏறுனா tyre தாண்டி puncture ஆகும் ..

ஆதவ் : (தீடீர்னு ரொம்ப tension ஆகிட்டான் .. )
                    ஏம்பா இப்டி பண்றீங்க ..
                    Bus எல்லாம்  ஏன் puncture ஆக்குறீங்க ...
                    Bus puncture ஆகிடுச்சுனா நாங்க எப்டி மாமா வீட்டுக்கு போறது ?

அப்பா :  (ஒரு punch dialogue பேச விட மாட்டியாடா .. )
என் கால் தானா உள்ள வந்துடுச்சு ...  மொத்த Bus ஸ்டான்டும் சந்தோசமா சிரிச்சுது :)

Like it?   Encourage my writing by a simple like here,

https://www.facebook.com/aadhavumappavum

Saturday, August 2, 2014

The Surprise Gift


அப்பா :  நான் phoenix mall வரைக்கும் போயிட்டு வரேன் ..

அம்மா :  எதுக்குங்க shopping போறீங்களா?  நானும் வரேன் ...

அப்பா :  Hey நான் shopping போற அளவுக்கு phoenix mall இன்னும் develop ஆகல .. சும்மா friend வந்திருக்கான் meet பண்ண போறேன் ..

எங்கேயோ விளையாடிட்டு இருந்த ஆதவ் நான் கிளம்புறத பார்த்து ஓடி வந்துட்டான்

ஆதவ் :  அப்பா phoenix mall போறீங்களா ? நானும் வரேன் பா உங்க கூட ...

அவன் last time அங்க போனப்போ ஒரு toy கார்க்காக எப்படி தரைல உருண்டு பொறண்டு அழுதான்னு ஒரு 2 mins flashback கண்ணு முன்னாடி ஒடிச்சு ...

அப்பா:  டேய் சாமி , நீ வேணாம் டா .. நீ அங்க வந்து ஓவரா அடம் பண்ணுவ .. நம்மால முடியாது .. நீ இங்கயே srinidhi கூட விளையாடு ...

ஆதவ் :  அப்பா , நான் அடம் பண்ணவே மாட்டேன்பா , good boy ஆ இருப்பேன் .. please கூட்டிட்டு போங்கப்பா ...

அப்பா :  பயபுள ரொம்ப feel பன்ட .. வா போகலாம் .. good boy ஆ இருக்கணும் ஆதவ் .. அங்க வந்து மொக்க போட்ட கடுப்பாகிடுவேன் ..

அம்மா :  என்னங்க இவனையா கூட்டிட்டு போறீங்க ..  last time . அங்க இருந்து அவன கூட்டிட்டு வர எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும் ல ..

அப்பா :   Hey .. குழந்தை திருந்திட்டான் டி ..

அம்மா :  யார் சொன்னா ?

அப்பா :  அவனே சொன்னான் ..    ( Refer to this dialogue "தேவாவே  சொன்னான் " from thalapathi movie)

Come On டா ஆதவ் .. ஓடி வா .. Lets Go ......

ஆதவ் குடு குடுனு ஓடி வந்து front சீட் ல  உட்காந்துகிட்டான் .. tring tring னு .. bell அடிச்சிட்டே...

பைக் ல எதுடா bell னு யோசிக்காதீங்க..  அது Cycle .. ஆதவ்க்கு cycle தான் ரொம்ப புடிக்கும்
(அப்படி பொய் எல்லாம் சொல்ல முடியாது ..  phoenix mall ல bike parking .. 100rs .. cycle க்கு free அதான் )

Night pant , ஒரு பழைய t-shirt போட்டுட்டு , cycle ல phoenix mall போறதே ஒரு ஜாலியா இருக்கும் ..  ஏன்னா மக்கள் அங்க கும்பல் கும்பலா ஏதோ marriage function போற மாதிரி ஓவர் build up ஆ வருவாங்க . அதுல 90% வேடிக்கை தான் பாக்க போறாங்க..  நாமளும் வேடிக்கை தான் பாக்க போறோம், plus நாம எவ்ளோ சூப்பரா dress பண்ணாலும் எவனும்/எவளும்  நம்மள மதிக்க போறது இல்ல .. எதுக்கு too much effort ..

(இப்ப எதுக்கு இந்த சமுதாய கருத்து சொல்றேன்னு கேட்கறீங்களா .. இருக்கு .. பின்னாடி வெச்சிருக்கோம் twist  :) )

Phoenix mall போயிட்டு, அங்க life style ல வேடிக்கை பார்த்துட்டு இருந்த friends a .. meet பண்ணி பேசிட்டு இருந்தேன்... அதுக்குள்ள ஆதவ் ground floor ல இருந்த LEGO toys கடைய பார்த்துட்டான்..

ஆதவ் :  அப்பா நாம கீழ போய் .. அந்த கடைய பார்த்துட்டு போவோம் ப்பா ...

(Same place , Same shop .... அந்த flashback நடந்த இடம்  இது தான் ... )

அப்பா :  டேய் தம்பி, உன் கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் நான் ..

சரி இவன் கிட்ட இருந்து escape ஆகுறது கஷ்டம் .. lifestyle ல போய் , உள்ள இருந்து second floor போய் escape ஆகிடுவோம் .

அப்பா :  ஆதவ் .. அப்பாவோட இன்னொரு friend , உள்ள இருக்கான் வா பார்த்துட்டு வந்துடலாம் ...

சொல்லிட்டே, வேகமா அவன உள்ள கூட்டிட்டு போயிட்டேன் ..  அவனுக்கு யோசிக்க எப்பவுமே time கொடுக்க கூடாது

LifeStyle உள்ள போய் , second floor exit கிட்ட போய்ட்டோம் .. அந்த நேரம் பார்த்து எதையோ பார்த்துட்டான் shop ல ..

ஆதவ் :  அப்பா அப்பா ... Lightning McQueen Car  அப்பா .. ( Cars  னு ஒரு animation movie வந்துச்சு , அதுல இதான் hero )

அங்க ஒரு kids செருப்பு , அதுல அந்த கார் sticker இருந்துச்சு .. சின்னதா .. அது எப்டி அவன் கண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னு தெரியல ..

அப்பா :  ஆதவ் , நான் உன் கிட்ட என்ன சொன்னேன் .. இப்ப அப்பா கிட்ட காசு வேற இல்ல டா ...

உண்மைலேயே நான் காசு எடுத்துட்டு வரல .. இந்த mall க்கு போனா , எப்படியாச்சும் செலவு பண்ண வெச்சிடுவாங்கனு  நான் காசே எடுத்துட்டு போகல ..

ஆதவ் :  அப்பா காசே இல்லையா ,,  நீங்க அப்புறமா சம்பாரிச்சு வாங்கி தரீங்களா .. நான் அழவே மாட்டேன் ப்பா ..வாங்க  வீட்டுக்கு போலாம் ...

நான் அப்டியே feel ஆகிட்டேன் ..  அப்ப மட்டும் card எடுத்துட்டு வந்து இருந்தேன் கண்டிப்பா வாங்கிட்டு இருப்பேன் ..

அப்பா :  ஆதவ் .. நீ சூப்பர் டா . Good  boy டா  நீ ..

அவன தூக்கி ஒரு முத்தம் கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டோம் .. அவன் சொன்ன மாதிரியே அவன் அழவே இல்ல அடம் புடிக்கவே இல்ல .

ஆதவ் :  அம்மா ..  நான் ஒரு chappal பார்த்தேன் .. car chappal ..  அப்பா கிட்ட கேட்டேன் .. காசே இல்லனு சொல்லிட்டாரு .. ஆனா நான் அழவே இல்ல தெரியுமா ..

அம்மா :  நீ செல்ல பாப்பா .. Good boy  நீங்க தான் ராஜா ..

ஆதவ் அப்டியே விளையாட போயிட்டான் ..

அப்பா :  ச்ச ... அவன் அடம் புடிச்சு கேட்டு இருந்தா கூட பரவா இல்ல டி .. எவ்ளோ அழகா கேட்டான் தெரியுமா .. முடியாதுனு சொன்ன உடனே வந்துட்டான்...  அவனுக்கு surprise a .. இன்னைக்கு night phoenix mall க்கு போறேன் அதே shoe வாங்குறேன் ... நாளைக்கு காலைல அவனுக்கு surprise gift கொடுக்குறேன் ..

அப்புறம் திரும்ப phoenix mall கிளம்பிட்டேன் .. வேகமா ..      இந்த முறை நடந்து  ....

Mall உள்ள போய் , நேரா LifeStyle , kids section போயிட்டு அந்த chappal எடுத்தேன் ....

Staff :  சொல்லுங்க..

அப்பா :   பையனுக்கு chappal வாங்கனும் ..

Staff :  ( என்ன ஒரு look விட்டுட்டு .. )  இது original high quality ..

அப்பா :  சரி

Staff :  இது  Crocs ..  branded ..

அப்பா :  சரி அதுக்கு

Staff :  இது 2000rs ஆகும்

அப்பா :  அதுக்கு என்ன இப்போ..  எவ்வளவா இருந்தா என்ன ..  இதுல 7 size இருக்கா ..  போய் எடுத்துட்டு வாங்க ..

அவன் உள்ள போய், ஒரு 10 mins ,  7 size ல அதே chappal தேடி கண்டுபுடிச்சு வெளில வந்து பாக்குறான், என்ன காணும் ...

நான் phoenix mall தாண்டி வந்து 5 mins ஆச்சு ...  வீட்டுக்கு slow motion ல நடந்து போயிட்டு இருந்தேன் ..

அட பாவி தம்மா தூண்டு chappal , அது 2000rs ..  போங்கடா நீங்களும் உங்க branded செருப்பும் ...
அவன சமாளிச்சு escape ஆகி வரதுக்குள்ள ..sssabbaaa .. 

கொஞ்ச நேரம் கழிச்சு lighta feel பண்ண ஆரம்பிச்சிட்டேன் ...  அவனோட சந்தோசத்துக்கு ஒரு 2000rs கூட செலவு பண்ண முடியாதா ..  இத்தனைக்கும் அவன் அடம் பண்ணி கூட கேட்கல .. எவ்ளோ அழகா கேட்டுச்சு குழந்தை ..

ஆனா என் mind சம dilemma ல இருக்கு ...

இத விட சூப்பர் chappal , cheap a வேற கடைல வாங்கலாம் .. But அவன் கேட்டது கிடைக்குமா தெரியாது ...   அதுவும் இவன் maximum one month தான் use பண்ண போறான் அதுக்கு இவ்ளோ costly ஆ எதுக்கு .. ??

Ok .. நண்பர்களே .. இந்த decision நான் உங்க கிட்டயே விட்டுறேன் ..   என்ன பண்ணலாம் .. வாங்கலாமா?  வேணாமா?  .. இல்ல வேற எதாச்சும் பண்ணலாமா ...

Go to this facebook page  Aadhavum Appavum, and give your comments..

Wednesday, June 4, 2014

கண்ணாமூச்சி!!!


அப்பா :   1,2,3,4..... 10  ஜூட் ..

ஆதவ் எனக்கு பின்னாடியே முகத்த ஒரு towel போட்டு மூடிட்டு இருந்தான் ..

(ஒளிஞ்சுகிட்டு இருக்கானாமா ....)

நானும் அவன கண்டு புடிக்காத மாதிரியே ...

அப்பா :  ஆதவ் எங்க காணும் .. இங்க தான இருந்தான் ... கண்டே புடிக்க முடியலையே...

சொல்லிட்டே வேற எங்கயோ தேடிட்டு இருந்தேன்...

இதுல சத்தமா சிரிப்பு வேற அவனுக்கு  .  புத்திசாலிதனமா ஒளிஞ்சி இருக்கோன்னு பெருமைல சிரிக்கிறானா இல்ல லூசு மாதிரி நான் வேற எங்கயோ தேடிட்டு இருக்றத பார்த்து சிரிக்கிறானா தெரியல ...

அவன பார்க்காத மாதிரியே அவன cross பண்ணி போனேன் ..  அப்ப suddena towel எடுத்துட்டு

ஆதவ் :   பே .......  ..   அப்பா பயன்துடீங்களா ...   எப்படி பயமுறுதிட்டேன் பார்த்தீங்களா உங்கள ...

அப்பா :  நான்  பயப்படவே இல்லையே ... அப்பா என்னைக்கு டா பயந்து பார்த்து இருக்க .. (night  தான் நல்லா  தூங்கிடுவானே .. எப்படி பார்த்து இருப்பான்  :) )

ஆதவ் :  அப்பா நானும் பயப்படவே இல்லப்பா...

அப்பா :   டேய் நீ தான என்ன  பயமுறுத்துன அதுக்கு நீ ஏன்டா பயப்படனும் ? நான் தான பயப்படனும் ..

ஆதவ் :  நான் தான உங்கள பயமுறுத்துன அதனால தான்ப்பா  நான் பயப்படவே இல்ல....

அப்பா :  Right ... தெளிவா பேசுற .. பெரிய அரசியல்வாதியா வருவ டா  நீ





Tuesday, April 22, 2014

தூக்கம் வருதா??

ஆதவ் கக்கா போயிட்டு இருந்தான் ..   ( எல்லாருக்கும் 'கக்கா' meaning தெரியும்னு நினைக்கிறேன் )

பய புள்ள  போகும் போது கண்ண மூடிட்டு போயிட்டு இருந்தான் ...

அப்பா :  Dai தம்பி என்ன பண்ற ?  தூங்குற இடமாடா இது..    (இல்ல ரொம்ப feel பண்ணி போறானோ ??)

ஆதவ் :  அப்பா turbo movie பார்த்தோம்ல tv ல

(ஏன் நம்மள மாதிரியே சம்பந்தமே இல்லாம answer பண்றான் ..   சரி mm கொட்டுவோம் ..)

அப்பா :  ஆமாம் அதுக்கு என்ன இப்போ ?

ஆதவ் :  அதுல ஒரு snail வரும் ல

அப்பா : ம்ம்

ஆதவ் :  அந்த snail ஒரு ஆள் புடிச்சிட்டு போய்டுவான் ல

அப்பா :  ம்ம்

ஆதவ் :  அப்புறம் அந்த snail ஒரு racing போகும் ல

அப்பா :  ம்ம்   என்னடா உன் பிரச்சனை இப்போ ..

ஆதவ் :  அப்போ அந்த snail ஒரு கார் கூட dash பண்ணி டமால்னு jump பண்ணி போகும் ல

அப்பா :  ம்ம்

ஆதவ் :  அப்போ அந்த snail fast a போய் டமால் னு இடிச்சு கீழ விழுந்துடும்ல

அப்பா : ம்ம்

ஆதவ் :  அப்போ அந்த snail கண்ண மூடி தூங்கும்ல ..

அப்பா :  அதுக்கு ??

ஆதவ் :  அதே மாதிரியே நானும் தூங்குனேன் பா ...

அப்பா :  அட உன்ன ஏன்டா தூங்குறேன்னு கேட்டது ஒரு குத்தமா ... அதுக்கு ஏன்டா இவ்ளோ பெரிய explanation ..   அந்த snail race போய் tired ஆகி தூங்குது .. நீ இங்க என்ன பண்ணிட்டு தூங்கிட்டு இருக்க ...

நான் கேட்டுகிட்டே இருக்கேன் .. மறுபடி கண்ண மூடி தூங்கிட்டான் .....


Like this page for more updates:  https://www.facebook.com/aadhavumappavum

Flight la போலாம் !!!


 நாங்க எல்லாரும் வீட்டுக்கு வெளில காத்து  வாங்கிட்டு இருந்தோம் ...

அப்போ ஆதவ் ஓடி வந்து,

ஆதவ் :    பாட்டி (என்  அம்மா ) பாட்டி ... அதோ பாரு மேல flight சொய்ங்ங்ங்... னு போது.. 
               பாரு பாட்டி பாரு ..

பாட்டி :   ம்ம்ம் (ஒரு பெரு மூச்சு விட்டுட்டு ).. நானும் இத்தன வருஷமா flight a  இப்டி தான் பார்த்துட்டு இருக்கேன் .. உங்க அப்பன் இருக்கானே ஒரு நாள் கூட என்ன கூட்டிட்டு போனது இல்ல ...
என் ராசா நீயாச்சும் பாட்டிய flight ல கூட்டிட்டு போவியாப்பா...??  

பரிதாபமா ஒரு கேள்வி ...   
என்ன பளார் பளார் னு அடிச்சா மாதிரி ஒரு feeling ..  
கந்து வட்டிக்கு கடன வாங்கியாச்சும் , திருப்பதி வரைக்குமாச்சும் குடும்பத்தோட flight ல போயிட்டு வந்துடனும் டா சாமி ..  

சரி இந்த பய எங்க ஓடுறான்..   flight ல கூட்டிட்டு போனு சொன்னதுக்கு online ல ticket book பண்ண போறானா ??

வீட்டுக்குள்ள குடு குடுனு ஓடி போனவன்   திரும்ப வந்தான் ..  

கைல ஒரு airoplane பொம்மை ...

ஆதவ் :   பாட்டி நீ பின்னாடி உட்காந்துக்கோ நான் முன்னாடி உட்காந்து ஓட்டுறேன்... வா நாம சொய்ங்ங்ங்னு flight ல போலாம் ....

எங்க அம்மாவுக்கு இவ்ளோ சீக்கிரம் அவங்க ஆசை நிறைவேறும்னு நினைக்கல .. திகைச்சி போய்ட்டாங்க  ... :)

அப்பா :  ஆதவ் அப்பாவ விட்டுட்டு போறியே  நானும் வரேண்டா ...

ஆதவ் :   அப்பா நீ என் பக்கத்துல உட்காந்துக்கப்பா ..

பாசக்கார பய நம்மள விட்டு எங்கயும் போக மாட்டான் ....  :) :)   

Lets Go ..    சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்......



Like this page for more updates: https://www.facebook.com/aadhavumappavum

Monday, March 24, 2014

அன்பும் பாசமும்

ஆபீஸ்ல இருந்து வீட்டுக்குள்ள வந்த உடனே, ஓடி வந்து பாசத்தோட கால கட்டி புடிச்ச ஆதவ ஆசையா அள்ளி அனைச்சு தூக்கினேன் ...

ஆதவ் :  அப்பா ஆபீஸ்ல இருந்து  என்ன வாங்கிட்டு வந்தப்பா ?

(இந்த bit போடறதுக்கு தான் அவ்ளோ பாசமா ஓடி வந்தியா... ??  
But நான் ஒன்னுமே வாங்கலையே ...  asusual எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்... )

அப்பா : அன்பும் பாசமும் வாங்கிட்டு வந்தேன் ஆதவன் ...

ஆதவ் :  இன்னாது.....????

அப்பா :  சரி கண்ண மூடு உனக்கு அப்பா அன்பும் பாசமும் தரேன் ...

( சிரிச்சிட்டே கண்ண மூடிகிட்டான் )

அவன் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு
இது... அன்பு ,
இன்னொரு கன்னத்துல இன்னொரு முத்தம் கொடுத்துட்டு
இது... பாசம் .....

ஆதவ் கண்ண திறந்து, கைய பார்த்தான், அப்புறம் ரெண்டு கைய விரிச்சு காமிச்சு, பரிதாபமா மூஞ்ச வெச்சிகிட்டு,

ஆதவ் :  அப்பா எங்கப்பா அன்பும் , பாசமும்  காணும்???????

அப்பா :   !!!!!?????  அது இங்க தான் எங்கயாச்சும் போய் இருக்கும் தேடி பாருடா ..   உன்கிட்ட போய் sentimenta பேசினேன் பாரு .....    :( :( :( :(  

Saturday, January 25, 2014

அப்பா ஒரு bad boy


ஆதவ்:  அம்மா அப்பா குட்டி வயசுல எப்டி இருந்தாரு ??
அம்மா :  உனக்கு அப்பாவோட குட்டி வயசு photo காட்டவா ?
ஆதவ் :  சரி ok .. 
(  அப்பா மனசாட்சி : மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இப்டி தான் english தமிழும்  சேர்த்து சொல்லுவான் )

அம்மா :  இத பாரு ஆதவ், இது தான் உங்க அப்பா சின்ன வயசு school போட்டோ ..  அப்பா எங்க கண்டுபுடி பார்க்கலாம் ? 
ஆதவ் :  அம்மா இந்த போட்டோ ல நெறைய girls இருக்காங்க .. அப்பாக்கு நெறைய girl friends இருக்காங்களா ??
(அப்பா மனசாட்சி : உன்ன என்ன கேட்டா அவ ...  உனக்கு என் இப்டி எல்லாம் doubt வருது ) 

அம்மா :  ஆமாண்டா .. உங்க அப்பா அப்பவே ஒரு bad boy ஆதவ் .. எவ்ளோ girl friends பாரேன் .
( அப்பா மனசாட்சி : அட பாவிகளா ...  காலேஜ் வரைக்கும் ஒரு பொண்ணு கிட்ட கூட பேசுனது கிடையாது .. :( :( ..  எனக்கு இப்டி ஒரு build up aaa )

ஆதவ் :   (அழுதுகிட்டே .... )   அம்மா அப்பாவ திட்டாத அம்மா .. 
(அப்பா மனசாட்சி : வாடா என் சிங்க குட்டி எனக்கு support பன்ன நீ ஒரு ஆளாவது இருக்கியே .. )

அம்மா:  அதுக்கு ஏன்டா அழுற .. உங்க அப்பாவ தான bad boy னு சொன்னேன் ..  
(அப்பா மனசாட்சி : விடவே மாட்டியா ..)

ஆதவ் :  அம்மா எனக்கு கூட school ல நெறைய girl friends இருக்காங்க , அப்ப நானும் bad boy தான?   அலால (அதனால ) நீ அப்பாவ bad boy சொல்லாத அம்மா ...

அம்மா, அப்பா மனசாட்சி, பாட்டி, தாத்தா, வீட்டு பல்லி , etc .. etc .. :   ???!!!!!!!!!!!???!!!!?!?!?!?!?!?!