ஐ அப்பா வந்துட்டார்னு கத்திட்டே ஓடி வந்து கதவை திறந்தான் ஆதவ்
அப்டியே ஆபீஸ் ல இருந்து வந்த என்ன பார்த்து சந்தோசமா குதிச்சிட்டு இருந்தான், அப்புறம் அவன் அம்மாவ பார்த்து திருட்டு முழி முழிச்சிட்டு இருந்தான் ..
அப்பா: என்னடா தம்பி reaction மாறுது , இன்னைக்கு ஏதாச்சும் பஞ்சாயத்து இருக்கா ..
அவன் அம்மா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா , ஓடி போய் அவ வாய மூடிட்டு, இல்ல இல்ல ஒண்ணுமே நடக்கலையேனு ஒரு திருட்டு சிரிப்பு சிரிச்சான் ..
அப்பா : சரி விடு, உன் அம்மா சொல்லி தான் தெரியனுமா, நீயே கொஞ்ச நேரத்துல உளறிடுவ , சாப்டுட்டு நம்ம பஞ்சாயத்து 'start ' பண்ணிடுவோம் .
( இப்படி தான் அடிக்கடி பஞ்சாயத்து வைப்போம் வீட்ல,
அவன் ஏதாச்சும் தப்பு பண்ணிருந்தான் அப்டீன்னா , பஞ்சாயத்தை கூட்டி , அதாவது நான், அவன் , அவன் அம்மா கூடி அவனை விசாரிப்போம், அதுல அவன் ஓவர் அலப்பறை விடுவான் , நீங்களே பாருங்க ..)
ஓகே பஞ்சாயத்து started,
நானும் அவளும் sofa ல உக்காந்துட்டு இருக்கோம் , அவன் எங்க முன்னாடி நின்னுட்டு நியாயத்தை( ????!!) விளக்க start பண்ணான் .
அம்மா : நீயே சொல்லிடு இன்னைக்கு என்ன தப்பு பண்ண exam ல, வீட்டுக்கு வந்து என் கிட்ட என்ன சொன்ன, இதுல மிஸ் வேற உங்க பையன் கிட்ட discipline கொறஞ்சிட்டு போகுதுனு complaint ...
ஆதவ் : இருங்க இருங்க நானே சொல்றேன் .. நீங்க நெறய சொல்லிட்டே போறீங்க ..
(அப்புறம் overa சினுங்கிகிட்டே.... )
அப்பா இன்னைக்கு தமிழ் exam ல கொஞ்சம் spelling mistake ஆகிடுச்சுப்பா அதுக்கு போய் அம்மா என்ன திட்றாங்க
அம்மா : டேய் , எவ்ளோ வாட்டி படிச்சு படிச்சு சொன்னேன்.. எவ்ளோ silly mistakes தெரியுமா ,
பசு பல் கொடுக்கும்,
தவளி தவியது ( தவளை)
களி படும் ( கிளி பாடும் )
மிஸ் உங்க பையனுக்கு focus issues இருக்குனு சொல்றாங்க .. எல்லாத்துலயும் அவசரம் ...
அப்பா : ஆதவா , நீ எதுல தப்பு பண்ணாலும் பரவா இல்லை இது நம்ம மொழி தமிழ் டா.. இது ரொம்ப கேவலம் டா தம்பி ..
( கோவமா அவன பார்த்தேன் .. எல்லாரும் அவன நல்லா corner பண்ணிட்டாங்கனு தெரிஞ்சிடுச்சு , இப்போ எப்டி handle பன்றான் பாருங்க ...)
ஆதவ் : அதுக்கு அம்மா என்ன அடிக்கலாமா .. எப்படி அடிச்சாங்க தெரியுமா .. எப்போ பார்த்தாலும் படி படி னு, திட்டிட்டு அடிச்சிட்டே இருக்காங்க ...
( ஒரு second ல face அப்டியே பாவமா ஆகிடுச்சு, குரல் உள்ள போய்டுச்சு ... கண்ணுல lighta தண்ணி எட்டி பாக்குது .. over sympathy ... )
அப்பா : அடப்பாவி டக்குனு topic மாத்திட்டியா .... over acting பண்ணாதடா டேய் ...
அது சரி புள்ளய எதுக்குடி அடிச்ச?
அம்மா: சொல் பேச்சு கேட்டா நான் என் அடிக்க போறேன் .. exam இருக்கு படி டா னு கொஞ்சம் கோவமா சொன்னதுக்கு என்ன சொன்னான் தெரியுமா .. நான் சொல்ல வேணாம்னு பார்த்தேன் இப்போ அவனே ஆரம்பிக்கிறான் ...
நீயே சொல்லு .. நீ என்ன சொன்ன நான் எதுக்கு உன்ன அடிச்சேன் ?
ஆதவ் : ரொம்ப தயங்கிட்டே , குரல் தழுதழுக்க , நான் ... நான் .. வீடு ...
அம்மா : சொல்லுப்பா .. எவ்ளோ திமிரா பேசுன.. இப்போ பேசு
( Scene ரொம்ப seriousa ஆகிட்டு இருக்கு .. அப்டி என்ன தான் சொன்னான் ....)
ஆதவ் : எனக்கு உங்கள புடிக்கல, வீட்ட விட்டு வெளிய போறேன்னு சொன்னேன் ..
(சம ஷாக் எனக்கு .. இவன் எப்படி இவ்ளோ பேசுறானு , அவளோட கண்ணுல தண்ணியே வந்துடுச்சு அத கேட்டு .. matter seriously serious ஆகிடுச்சு)
அம்மா : இப்டி சொன்னா , என்னடா செய்வாங்க .. அது என்ன அப்படி பேச்சு இந்த வயசுல உனக்கு
ஆதவ் : அதுக்குன்னு இப்டி அடிப்பீங்களா , எவ்ளோ வலிக்குது தெரியுமா..
(again topic change, sympathy க்கு அழ வேற ஆரம்பிச்சிட்டன் )
அப்பா : அட ஆரம்பிச்சிட்டியா , இப்போ எதுக்கு நீ இவ்ளோ buildup , scene போடற.. ஒரு 3 அடி அடிச்சிருப்பாளா .. எனக்கே கோவம் வருது நீ ரொம்ப பண்றடா ஆதவா
( Judge டென்ஷன் ஆக்கிட்டாங்க ...)
ஆதவ் : வெறும் 3 அடியா , நீங்க வாங்கி பாருங்க அப்போ தான் தெரியும் ..
( வாங்கி இருக்கேனு opena சொல்லவா முடியும் ...)
ஒரு நாளைக்கு 3 அடி , அப்டீன்னா மாசம் 100 அடிக்கு மேல வாங்குறேன் .. சும்மாவா
அப்பா : அப்போ கூட மாசம் 100 அடி வராதே ( நம்ம maths அறிவு காட்டி ஆகணும்ல )
ஆதவ் : Sometimes 5 அடி லா அடிப்பாங்க ...உங்களுக்கென்ன இப்போ கூட சிரிச்சிட்டு தான் இருக்கீங்க .. வாங்குற எனக்கு தான தெரியும் வலி ..
அப்பா : டேய் மண்டூசா , போதும் .. அதுக்குன்னு இப்டி பேசுவியா, நீ வீட்டை விட்டு வெளிய போறேன்னு சொன்னதுக்கு, உன் மேல இருக்க பாசத்துல தான அம்மா அடிச்சுது ..
ஒழுங்கா sorry கேளு .
ஆதவ் : நான் கேட்க மாட்டேன் .. எனக்கு அம்மாவ பிடிக்கல .. எனக்கு அம்மாவ பிடிக்கல .. எனக்கு அம்மாவ பிடிக்கல ..
( திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சுட்டான் ,
உங்கள அதே மாதிரி அடிச்சா தான் தெரியும்னு அவளை அடிக்க ஆரம்பிச்சிட்டான் ..
அவ ரொம்ப seriousa ஆகிட்டா, அப்டியே silent ஆகிட்டா , எதுவுமே பேசல .. )
அப்பா : ஆதவா ......... அவ்ளோ தான் ... நிறுத்து போதும்.. பளார்னு ஒரு அரை விட்டேன் ( lighta தான் )..
அவன் ஒ...னு அழுதுட்டு , எனக்கு அம்மாவ பிடிக்கல பிடிக்கல னு சொல்லிட்டு ஓரமா போய் படுத்துட்டான் .... இவ ரொம்ப seriousa மூஞ்ச வெச்சுகிட்டு silenta kitchen குள்ள போய்ட்டா ...
என்னடா இது பஞ்சாயத்துக்கே வந்த சோதனை ...
ஒரு 10 நிமிஷம் கழிச்சு , அவன் அழுகை கொஞ்சம் குறைஞ்சது .. சரி first இவன் கிட்ட இருந்து ஆரம்பிப்போம் ..
ஆதவா வா நாம வாக்கிங் போவோம் ..
( Walking... எங்க அபார்ட்மெண்ட் compound சுத்தி ஒரு 2-3 rounds போறது தான் walking
அப்போ தான் நானும் அவனும் எல்லாம் பேசுவோம் .. ஏதாச்சும் மொக்க stories , இல்ல என்னோட philosophies , எல்லாமே அதுல தான் ஓடும் .. எவ்ளோ மூட் அவுட்டா இருந்தாலும் walking கு ரெண்டு பேரும் கிளம்பிடுவோம் )
அவன் அழுதுட்டே , எனக்கு அம்மாவ பிடிக்கல னு சொல்லிட்டே என் கூட வந்தான் .
அப்பா : ஆதவா நிறுத்து , எல்லாத்துக்கும் ஒரு limits இருக்கு .. சொன்னதையே சொல்லாத irritate ஆகுது .. இன்னொரு அரை வேணுமா
ஆதவ் : அடிங்க நீங்களும் அடிங்க .. உங்க யாருக்குமே என்ன பிடிக்கல ..
( இவன் எப்படி இவ்ளோ பேச ஆரம்பிச்சான் தெர்ல ..கொஞ்சம் soft ஆகி ..)
அப்பா : டேய் செல்ல காக்கா .. உனக்கு பெரியவங்களுக்கு respect கொடுக்கணும்னு எவ்ளோ சொல்லி இருக்கேன் .. நீ mark கம்மியா வாங்குனதுக்கா நான் கோவப்பட்டேன் .. அம்மா வயே அடிக்க கை ஓங்குற, அப்புறம் overa பேசுற ... சரி இல்ல ஆதவா
ஆதவ் : நீங்க அம்மாவ எதுவுமே கேட்காதீங்க எல்லாமே என்னையே கேளுங்க
அப்பா : நீ first எதிர்த்து பேசுறத நிறுத்து .. கூட கூட பேசாத ..
உன் தமிழ் book ல என்ன சொன்னாங்க .. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை .. நம்ம அம்மாவ எவ்ளோ respect பண்ணனும் அப்போ ?
ஆதவ் : தாயிற் சிறந்த கோவிலா , அப்போ தஞ்சாவூர் கோவில் எவ்ளோ பெரிசா இருக்கு , அம்மா எவ்ளோ குட்டியா இருக்காங்க .. அதுக்கு என்ன சொல்றீங்க ..
( எல்லாம் இந்த chinchan effect )
அப்பா : அட டோங்கிலி , அதுக்கு பெரிசு அர்த்தம் இல்லடா .. நம்ம அம்மாவ நாம கடவுள விட மதிக்கணும்னு அர்த்தம்
( அவனுக்கு இப்டி என்ன என்னவோ சொல்லி பார்த்தேன், திருக்குறள் ஆரம்பிச்சு, recent SJ.Surya அம்மா song வரைக்கும் சொல்லி பார்த்துட்டேன் .. அவன் கேட்கவே இல்ல .. எனக்கு அம்மாவ பிடிக்கல சொல்லிட்டே இருந்தான், நாங்க பொதுவா walkingல ஜாலியா பேசுற மாதிரியும் இல்ல, ஒரே அழுதுட்டு பொலம்பிட்டு இருந்தான் ... ரொம்ப disturb ஆனா மாதிரி )
அப்பா: ஓகே நீ இவ்ளோ feel ஆகிட்ட , எனக்கு நீ தாண்டா முக்கியம், நீ வெளிய போக வேணாம் , நான் அம்மாவ அனுபிட்றேன் வீட்ட விட்டு ... பிடிக்காம ஒன்னும் வேணாம் நமக்கு
ஆதவ்: இல்ல இல்ல அம்மா வீட்லயே இருக்கட்டும் . நானும் வீட்லயே இருக்கேன் ..
அப்பா : அப்போ உனக்கு அம்மா அவ்ளோ பிடிக்கும் தான ..
ஆதவ்: இல்ல எனக்கு அம்மா பிடிக்காது .. ஆனா வீட்ல இருக்கட்டும்
அப்பா : என்னடா கேனத்தனமா பேசிகிட்டு , பிடிக்காதுன்னு சொல்ற அப்புறம் வீட்லயே இருக்கட்டும் சொல்ற , என்ன logic டா , எனக்கு புரியவே இல்லையே
ஆதவ் : உங்களுக்கு புரிய வேணாம் , எனக்கு புரிஞ்சா போதும் .. நீங்க அம்மா வீட்ட விட்டு போ சொல்ல கூடாது
அப்பா : ஆமாம் டா .. எனக்கு தாண்டா புரியல .. உனக்கும் புரிய வைக்கவும் முடியல.. ஒழுங்கா போய் தூங்கலாம் .. தூங்கி எழுந்துக்கோ அப்புறம் தெளிவா பேசுவோம் ..
(வீட்டுக்கு போய் அவன bed ல படுக்க வெச்சுட்டு, kitchen ல இன்னும் seriousa பாவமா நின்னுட்டு இருந்த என் wife பாக்க போனேன் )
அப்பா : நீ அவன இனிமேல் அடிக்காதடி .. . நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்குறான் .. அதையே சொல்லிட்டு அழுதுட்டு இருந்தான் .. தூங்கி எழுந்தா மறந்துடுவான் , பொறுமையா மாத்துவோம்.. நீ over feel ஆகாத
அப்டியே என்ன செய்றதுன்னு தெரியாம, sofa ல உட்காந்து டிவி பார்த்துட்டு இருந்தேன் ..
திடீர்னு bedroom door open ஆச்சு , இந்த பையன் கண்ண கசக்கிட்டே வெளிய வந்தான் ..
அப்பா : டேய் உன்ன தூங்க தான சொன்னேன் .. ஒழுங்கு மரியாதையா போய்டு ..
என்ன சுத்தமா மதிக்காம kitchen போனான் .. அவன் பின்னாடியே நானும் போனேன்
அப்பா : போதும் போதும் .. மறுபடி ஆரம்பிக்காதடா .
நான் சொல்லிட்டே அவன புடிக்க போனேன் ..
அவன் குடு குடுன்னு ஓடி போய் அவன் அம்மாவ பின்னாடி இருந்து புடிச்சுகிட்டு..
ஆதவ் : அம்மா sorry மா , நான் எங்கயும் போக மாட்டேன் .. நீங்களும் எங்கயும் போக கூடாது என் கூடவே நம்ம வீட்லயே இருக்கலாம் .. sorry...
அந்த சில மணித்துளி மௌனம் , சில 'மணி'த்துளி கண்ணீர் ..
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.